செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (07:20 IST)

என்ன ஆனாலும் கோலி டி 20 உலகக் கோப்பை அணியில் இருக்க வேண்டும்… ரோஹித் ஷர்மா உறுதி!

ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை அணியில் எடுக்காமல் இருக்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்களின் தன்மை கோலியின் பேட்டிங் பாணிக்கு சரிவராது என்பதால் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவரை அணியில் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து காரசாரமான விவாதம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நடந்து வருகின்றது. இந்நிலையில் தேர்வுக்குழுவினர் இதுகுறித்து கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் ஆலோசனைக் கேட்ட போது அவர் “என்ன ஆனாலும் சரி அணியில் கோலி இருந்தே ஆகவேண்டும்” என உறுதியாகக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கோலி அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று சொல்லப்படுகிறது.