வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (08:49 IST)

பொதுக்கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்! மும்பை பறந்த மு.க.ஸ்டாலின்!

Stalin Speech
இன்று மும்பையில் ராகுல் காந்தி நடத்தும் ;நியாய சங்கல்ப் யாத்திரை’யின் நிறைவு விழாவில் எதிர்கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துக் கொள்கிறார்.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A கூட்டணி கட்சிகள் மூன்றாவது முறையாக பாஜக பெரும்பான்மை வெற்றி பெறுவதை கூடிய மட்டும் குறைக்கும் நோக்கில் உள்ளன.

கடந்த ஆண்டு முதலாகவே காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாதயாத்திரை மூலமாக இந்தியா முழுவதும் பல பகுதிகளிலும் பயணித்து மக்களிடையே பேசி வந்தார். அவரது பாரத் ஜோடோ யாத்ரா மக்களிடையே காங்கிரஸ்க்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று ராகுல்காந்தி மும்பையில் ‘நியாய சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில் மணிபவன் தொடங்கி ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை நடைபயணம் செய்கிறார். பின்னர் மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிகழ்வு நிறைவு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பல எதிர்கட்சி தலைவர்களும் கலந்துக் கொள்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல் நாளே அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றுகூடும் நிகழ்வு என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K