திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:56 IST)

பேட் செய்யும்போது மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா… என்ன ஆச்சு?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியின் போது முதுகு பிரச்சனை காரணமாக வெளியேறினார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென முதுகுப் பிரச்சனை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக் அணியின் பிஸியோ வந்து அவரோடு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியேறினார்.

போட்டி முடிந்த பின்னர் முதுகுப்பிரச்சனை குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “இப்போது பரவாயில்லை.அடுத்த போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்குள் முழுவதுமாக குணமாகிவிடுவேன் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.