1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (06:53 IST)

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தி மைதானத்துக்குள் நடந்து சென்று அங்கிருந்த சில புற்களை எடுத்துத் தின்றார். அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அதற்கான பின்னணி என்ன என்பது குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில் “இந்த மைதானம்தான் எனக்கு நான் வேண்டிய வெற்றியைக் கொடுத்தது. அதனால் இந்த மைதானம் எப்போதும் என் நினைவில் இருக்க வேண்டும், எனக்குள் கலக்கவேண்டும் என்பதற்காகதான் புற்களை சாப்பிட்டேன். இந்த தருணம் மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய ஒட்டுமொத்த கனவும் பார்படாஸில் நனவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார். இதே போல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும் புற்களை எடுத்து சாப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.