புதன், 6 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (10:30 IST)

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்களை இழந்தது. இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு மிக எளிதாக சென்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்துக் கலக்கிய ரோஹித் ஷர்மா நேற்று இரண்டு சாதனைகளைப் படைத்தார். இந்த போட்டியில் அவர் இந்திய அணியின் கேப்டனாக 5000 ரன்களைக் கடந்தார். இந்த சாதனையை படைக்கும் ஐந்தாவது வீர்ர ரோஹித் ஷர்மா. இதற்கு முன்னர் அசாரூதின், கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். அதே போல டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் 113 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரி அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.