செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:18 IST)

’நீ என்ன பெரிய ஹீரோவா… அதெல்லாம் ட்ரை பண்ணாத’ … சர்பராஸ் கானை கண்டித்த ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய அணி பீல்டிங் செய்த போது சர்பராஸ் கானை பார்வேர்ட் ஸ்லிப்பில் நிற்க அழைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. அப்போது சர்பராஸ் கான் ஹெல்மெட் அணியாமல் வந்து நின்றார். அவரைக் கண்டித்த ரோஹித் ஷர்மா “ ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே.” என கூறி ஹெல்மெட் அணிந்துகொள்ள அறிவுறுத்தினார்.