1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:22 IST)

3 ஆண்டுகளுக்குப் பின் சதம் அடித்த ரோஹித் சர்மா!

rohit sharma
ஒருநாள் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்குப் பின் இன்று ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.

கடந்த  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த போட்டியின் போதுதான் அவர் சதம் அடித்திருந்தார்.

அதன் பின்னர், அவர் விளையாடி பல போட்டிகளீல் சொற்ப ரன் கள் மட்டுமே அடித்திருந்தார். சமீபத்தில், இந்தியய டி-20 போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக  நியமிக்கப்பட்டார்.

எனவே விரைவில் ரோஹித் சர்மா கேப்டன் பதவி பறிபோகுமா ? என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், இன்று நியூசிலாந்திற்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில், ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணி 385 ரன் கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.