திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (11:57 IST)

கண்ணாடிய திருப்பினா எப்படி வண்டி ஓடும்… ஆர் சி பி அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வரும் அணிகளில் ஒன்றாக ஆர் சி பி இருக்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் டு பிளசிஸ் ஆகிய மூவரைத் தவிர யாருமே சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. அந்த அணியின் பவுலர்களை  பற்றி சொல்லவே வேண்டாம். எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அதைக் கட்டுப்படுத்தாமல் ரன்களை வாரி வழங்குகிறார்கள்.

இந்நிலையில் அடுத்து அவர்கள் 21 ஆம் தேதி கே கே ஆர் அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பச்சை நிற ஜெர்ஸி அணிந்து ஆடவுள்ளனர். இது குறித்த அறிவ்ப்பு வெளியானதுமே புகழ்பெற்ற தமிழ்ப் பட வசனமான ‘கண்ணாடிய திருப்பினா மட்டும் எப்படி வண்டி ஓடும்’ என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.