வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 மே 2024 (00:17 IST)

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Csk vs RCB
இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.



டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபியின் ரன்களை கட்டுப்படுத்த தவறியது. இதனால் கோலி 47 ரன்கள், பாப் டூ ப்ளெசிஸ் 54 ரன்கள், ரஜத் படிதார் 41 ரன்கள், கேமரீன் க்ரீன் 38 ரன்கள் என குவித்த நிலையில் ஆர்சிபியின் மொத்த ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஆக முடிந்தது.

இதையடுத்து பேட்டிங்கில் இறங்கிய சென்னை அணியில் முதல் பந்திலேயே கேப்டன் ருதுராஜ் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். ரச்சின் ரவீந்திரா நின்று விளையாடி 61 ரன்கள் குவிக்க அடுத்தடுத்து வந்த டேரில் மிட்செல் 4 ரன்களிலும், ரஹானே 33 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ரன் அடிக்கும்போது ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஷிவம் துபேவால் ரச்சின் ரவீந்திரா ரன் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து துபேவும் 7 ரன்களில் அவுட் ஆனார்.


மிட்செல் சாண்ட்னரும் 3 ரன்களில் அவுட் ஆன நிலையில் ஜடேஜாவும், தோனியும் நின்று ஆட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். மேட்ச் ஜெயிக்க முடியாவிட்டாலும் ப்ளே ஆப்க்கு தேவையான ரன்களை அடிப்பதே அவர்களது இலக்காக இருந்தது. ஆனால் தோனியும் 25 ரன்களில் அவுட் ஆன நிலையில் அடுத்தடுத்த பந்துகளும் விரயமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிஎஸ்கேவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ப்ளே ஆப் தகுதி பெறலாம் என்ற நிலையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆர்சிபி அணி தற்போது 4வது அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது.

Edit by Prasanth.K