திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (07:38 IST)

நிறைய தவறுகளை செய்தோம்… பார்ட்னர்ஷிப் அமையவேயில்லை – தோல்வி குறித்து பாஃப் டு பிளசிஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.

இதையடுத்து பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டிகாக் (81), ஸ்டாய்னஸ்(24) மற்றும் பூரான் (40) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.  அதன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே சேர்த்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய பாஃப் டு பிளசிஸ் “எங்கள் பந்துவீச்சு பவர்ப்ளேயில் மிகவும் மோசமாக இருந்தது. டி காக் மற்றும் பூரான் ஆகியோரின் கேட்ச்களை விட்டால் அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கடைசியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசியதாக உணர்கிறேன். டி 20 போட்டியில் வெற்றி பெறவேண்டுமென்றால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும்.  ஆனால் எங்களுக்கு அது அமையவேயில்லை. வீரர்கள் போராட்ட குணத்தை வெளியிட்டு அணிக்கு கைகொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.