திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (21:31 IST)

தடுமாறி பின் ரியான் பராக் அதரடியால் எழுந்த ராஜஸ்தான் ராயல்ஸ்… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிர்ணயித்த இலக்கு!

ஐபிஎல் 17 ஆவது சீசனின் ஒன்பதாவது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் ரன்களைக் குவிக்கமுடியாமல் அடுத்தடுத்து முன்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ரன்கள் சேர்த்து அவருக்குத் துணையாக இருந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பந்துவீசிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.