ராகுலுக்கு முழு ஆதரவு உண்டு… பயிற்சியாளர் டிராவிட் அளித்த நம்பிக்கை!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் இப்போது இக்கட்டான நிலையில் அணியில் இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
இதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் பண்ட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் எனக் கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் “ ராகுலுக்கு அணியில் முழு ஆதரவு உண்டு. அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். டி 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது அவ்வளவு எளிதில்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரமும் இதே கருத்தை ராகுலுக்கு ஆதரவாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.