திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (18:19 IST)

ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது – சுனில் கவாஸ்கர் கருத்து!

இந்திய அணியை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்துவதில் ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட்டுக்கு மட்டுமே கோலி தலைமை தாங்குவார். அதன் பிறகு அவர் தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்ப உள்ளார். இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக்க செயல்படவுள்ளார்.

இந்நிலையில் மூன்று போட்டிகளில் தலைமை தாங்குவதால் ரஹானேவுக்கு எந்த அழுத்தமும் இருக்காது என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ரஹானே ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அந்த இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றுள்ளது. அதனால் அவருக்கு எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியும்.’ எனத் தெரிவித்துள்ளார்.