மலையாள ஹிட் படத்தின் ரீமேக்கில் அசோக் செல்வன் – கதாநாயகி யார் தெரியுமா?
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன் மலையாள படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்திருந்த "ஓ மை கடவுளே" படம் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படமாக அமைந்தது.
இதையடுத்து அவருக்கு இப்போது வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பியாரே கூட்டமணி என்ற படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளாராம்.