வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (10:15 IST)

கில்கிறிஸ்ட்டின் சாதனையை முறியடித்த குயிண்ட்டன் டி காக்!

தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டிகாக் நேற்று சதமடித்தார்.

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டிகாக் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றை மூன்றாவது போட்டியில் அவர் சதமடித்தார். இந்த சதம் அவரின் 17 ஆவது சதமாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர்களின் (16 சதங்கள்) பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கில்கிறிஸ்ட்டின் சாதனையை முறியடுத்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா 23 சதங்களோடு அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.