திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (15:45 IST)

ஐபிஎல் திருவிழா இரண்டாம் நாள்… டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் எடுத்த முடிவு!

ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதையடுத்து இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சண்டிகாரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் ஆடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி விளையாடி வருகிறது.

அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வருகின்றனர். டெல்லி அணியின் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இணைந்துள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளது.