1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (16:29 IST)

பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடத்த திட்டம்?

pakisthan
பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை, அல்லது வங்கதேசத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  16 வது கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் நடக்கிறது. இதில், இந்தியா பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் போர்ட்  அறிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் கூறியது.

இந்தியாவில் போட்டிகள் நடப்பதற்குப் பதில், ஓமன், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போட்டிகள்  நடத்தத் திட்டமிடப்பட்டது.

செப்டம்பரில், கோடை காலம் நிலவும்போது, பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போட்டியை  இங்கிலாந்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக, இந்தியாவுக்குச் செல்ல வேண்டாமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டு முடிவு எடுத்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை, அல்லது வங்கதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.