எச்சில் துப்பாம எப்படி பந்து வீசுறது? – ஆஸ்திரேலிய பவுலர் கேள்வி!

வியாழன், 21 மே 2020 (14:39 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவியதை தொடர்ந்து கிரிக்கெட்டில் பந்தில் எச்சில் தடவுதலை தடை செய்வது சிரமமான காரியம் என ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிரிக்கெட்டிலும் ஐசிசி குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வர உள்ளது. எச்சிலின் மூலம் கொரோனா பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் இனி கிரிக்கெட்டில் பந்து வீசும்போது அதில் எச்சிலை தடவ கூடாது என ஐசிசி புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் “எச்சிலை பந்தில் தேய்த்து வீசுவது என்பது பவுலர்களது நீண்ட நாள் பழக்கம். அதை தடுப்பது மிகவும் கடினம்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனும், பவுலருமான பேட் கம்மின்ஸ் “பந்தி எச்சிலை தடவுவதற்கு தடை விதித்தால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது செயற்கையான பொருளை பயன்படுத்தவாவது அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments