1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:59 IST)

‘கோலிதான் இப்போது எங்களது பிரச்சனை’… ஆஸி வீரர் கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை தொடங்க உள்ளது.

கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் “கோலிதான் இப்போது எங்களுக்கு இருக்கும் பிரச்சனை. அவர் பார்முக்கு வந்திருப்பது எதிரணிகளுக்கு பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.