சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.
இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக WTC இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸி அணிக்குக் கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரின் மிடாஸ் டச் வெற்றி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸி அணி
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், மேட் ஷார்ட், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்னஸ் லபுஷான், மார்கஸ் ஸ்டாய்னஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஆடம் ஸாம்பா