வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (09:20 IST)

5 விக்கெட்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்… அசத்தும் ஆஸி பவுலர்கள்!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் ஆகிய இருவரும் சிறிது நேரம் நிதானமாக விளையாடினாலும் 35 மற்றும் 26 ரன்கள் சேர்த்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி நிலைதடுமாறியது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். சற்று முன்பு வரை பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.