1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 மே 2024 (07:28 IST)

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே நடக்க உள்ளது. இந்த போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை சில நிபந்தனைகளோடு வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

முதலில் ஆர் சி பி பேட் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சி எஸ் கே நெட் ரன் ரேட்டை அந்த அணி தாண்டும். அதுபோல இரண்டாவது பேட் செய்தால் ஆர் சி பி 18.1 ஓவர்களுக்குள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்று லக்னோ அணி தங்கள் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றால் ஆர் சி பி அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் செல்லும். 

ஆனால் போட்டி நடக்கும் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் போட்டி நாளான இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சென்றுவிடும். அதனால் மழை பெய்யக் கூடாது என ஆர்சிபி அணி ரசிகர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.
ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் போட்டி நடக்கும் நேரத்தில் மழை விட்டுவிட்டால் மிகக்குறுகிய நேரத்தில் மழை நீரை வடிகட்டிவிட்டு 15 நிமிடத்தில் போட்டியை நடத்திவிடும் வசதி சின்னசாமி மைதானத்தில் உள்ளதாம். அந்த மைதானத்தில் உள்ள வசதிகளைக் கொண்டு ஒரு நிமிடத்தில் 10000 லிட்டர் தண்ணீர் வரை வெளியேற்ற முடியும். அதனால்  போட்டி நடப்பதற்கு பெரிதாக தடையேதும் இருக்காது என எதிர்பார்க்கலாம்.