செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (17:13 IST)

யார் சாமி இவரு.. ஒரே ஆளாக 10 விக்கெட்டையும் தட்டித் தூக்கிய அன்ஷுல் கம்போஜ்! - மிரண்டு போன மைதானம்!

Anshul Kamboj

பிரபலமான ரஞ்சிக் கோப்பை போட்டியில் இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் மொத்த விக்கெட்டையும் வீழ்த்தியது பலரையும் ஆச்சர்யத்தை ஆழ்த்தியுள்ளது.

 

 

இந்தியாவில் பிரபலமான ரஞ்சிக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல பகுதிகளில் ஆங்காங்கே நடந்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டிகளை காணவும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

அந்த வகையில் இன்று கேரளா, அரியானா அணிகள் இடையே நடந்த லீக் போட்டியில் அரியானா அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். கேராளவுக்கு எதிரான இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் மொத்தமுள்ள 10 விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

 

மேலும் இந்த போட்டியில் மொத்தம் 30 ஓவர்களுக்கு பந்துவீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அன்ஷுல் அதில் 9 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

 

இதன் மூலம் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரத்தின் சாதனையை சமன் செய்து 3வது நபராக சாதனை படைத்துள்ளார் அன்ஷுல் கம்போஜ்

 

Edit by Prasanth.K