செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (09:48 IST)

சர்வதேசக் கிரிக்கெட்டில் எட்டாவது வீரர்.. மைல்கல்லை எட்டிய நாதன் லயன்!

j

ஆஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் தற்போது கிரிக்கெட் விளையாடும் சுழல்பந்து வீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் 100 போட்டிகளை விளையாடி மைல்கல்லை எட்டினார். சமீபத்தில் அவர் ஆசியாவில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய விசிட்டிங் பவுலர் என்ற சாதனையைப் படைத்தார்.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் லயன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்திய எட்டாவது பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுபோல இந்த சாதனையைப் படைக்கும் மூன்றாவது ஆஸ்திரேலிய பவுலராகவும் இடம்பிடித்துள்ளார்.

இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள நாதன் லயன் 501 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது 36 வயதாகும் லயன் இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் 600 விக்கெட்கள் என்ற மைல்கல்லையும் எட்டுவார் என எதிர்பார்க்கலாம்.