திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (07:18 IST)

என் சிறுநீரகம் 60 சதவீதம்தான் வேலை செய்கிறது… ஆஸி வீரர் கேமரூன் க்ரீன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலிய அணிக்காக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்து வருகிறார் கேமரூன் க்ரீன். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 17 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் இப்போது பெங்களூர் அணிக்காக ட்ரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் தான் பிறந்ததில் இருந்தே தன்னுடைய சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். அதில் “நான் பிறந்தபோதே என் பெற்றொரிடம் என்னுடைய சிறுநீரக பாதிப்பு பற்றி சொல்லிவிட்டார்கள். என்னுடைய சிறுநீரகங்கள் ரத்தத்தை முறையாக வடிகட்டுவதில்லை. அவை 60 சதவீதம்தான் செயல்படுகின்றன.

ஆனால் சிறுநீரக பாதிப்பு என்னை முடக்கிவிடவில்லை என்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமே. என்னுடைய பாதிப்பு 2 ஆம் கட்டத்தில் உள்ளது. நான் முறையாக அதை பராமரிக்கவில்லை என்றால் அவை கண்டிப்பாக கெட்டுப் போய்விடும்.இது பற்றி நான் ஆஸ்திரேலிய அணி சக வீரர்களிடமும் கூறியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.