1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (13:31 IST)

''நெஞ்சம் உடைந்து சிதறியது''-இந்திய அணி தோல்வி பற்றி செல்வராகவன்

selvaragavan
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று குஜராத்- அகமதாபாத்தில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது.

இதில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி  பந்துவீச்சை தேர்வு  செய்தது. எனவே இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்  3 பேர் அவுட்டாகினர்.

அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான் இணை திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

எனவே  மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி கோப்பையை வசமாக்கியது.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தன் எக்ஸ் தளத்தில்,

‘’நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு  அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம்.

அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது.

நெஞ்சம் உடைந்து சிதறியது’’என்று தெரிவித்துள்ளார்.