Daily Horoscope
✕

எதிர்பாராத காரணத்தால் மீண்டும் டி 20 அணிக்குள் முகமது ஷமி… என்ன காரணம்?

Updated: சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
முகமது ஷமி இந்திய டி 20 அணியில் கடந்த ஒரு வருடமாக விளையாடவில்லை என்பது கேள்விகளை எழுப்பின.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங் கூட்டணி பலவீனமாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதே போல மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்நிலையில் முகமது ஷமியை ஏன் தேர்வு செய்யவில்லை என முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஆசியக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய டி 20 அணியில் மீண்டும் ஷமி விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பூம்ராவின் காயம் காரணமாக அடுத்து இந்திய அணி விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் அவர் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. மேலும் டி 20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் பெயர் பரிசீலிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

4வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. மே.இ.தீவின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரம்...

மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. ஆனால் பாதி விலைக்கு தான்...

கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments