1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:46 IST)

“பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் இருக்கலாம்…” ஆசியக் கோப்பை போட்டி குறித்து ரிக்கி பாண்டிங்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட 8 மாதத்துக்குப் பிறகு ஆசியக்கோப்பை தொடரில் மோத உள்ளன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் வெளியான நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.

இந்த தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேலும் முதல் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால்  அடுத்த சுற்றில் 2 முறை மோத வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் குறைந்த நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடக்க உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இதுகுறித்து அவர் “இந்த போட்டியைக் காண நானும் மற்றவர்களைப் போல ஆவலாக உள்ளேன். இந்த போட்டியில் இந்திய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம். அதனால் நான் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஆசியக்கோப்பைக்கு மட்டும் இல்லாமல் அடுத்து வரும் டி 20 உலகக்கோப்பைக்கும் இந்திய அணி தயாராக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.