செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:30 IST)

இறுதிப் போட்டிக்கே நாம் எப்படி வந்தோம் என்பது தெரியும்… பாகிஸ்தான் அணி குறித்து அமீர் கருத்து!

பாகிஸ்தான் அணி குறித்து முகமது ஆமீர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன் பின்னர் அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அமீர் “நாம் எப்படி அரையிறுதிப் போட்டிக்கு வந்தோம் என்பது தெரியும். நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால்தான் அரையிறுதிக்கே வந்தோம்” எனப் பேசியுள்ளார்.