Daily Horoscope

அடுத்த ஆண்டு சென்னை அணிக்குக் கேப்டன் யார்?... சி ஈ ஓ காசி விஸ்வநாதன் பதில்!

Updated: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (16:55 IST)
சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவிந்தர ஜடேஜா பாதியிலேயே பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆண்டு சீசனில் கடைசி சில போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே சுமூகமான உறவு தற்போது இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு அவர் சென்னை அணிக்காக விளையாடமாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் “அடுத்த ஆண்டும் சென்னை அணியை தோனிதான் வழிநடத்துவார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments