1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:33 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகல்!

Jadeja
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இதில் ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து திடீரென ஜடேஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.