டி 20 உலகக்கோப்பையிலும் ஜடேஜா விளையாட மாட்டாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றூ நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதற்காக சில கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணியை அறிவித்துள்ளன.