வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:26 IST)

குறைந்த இன்னிங்ஸில் 150 விக்கெட்கள்… பல சாதனைகளை முறியடித்த குல்தீப் யாதவ்!

தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். மூன்று இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 88 இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

அவருக்கு முன்பாக முகமது ஷமி மட்டுமே 80 இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய பவுலர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.