ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (14:54 IST)

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் இரண்டு பவுலர்கள் சேர்ப்பு… பின்னணி என்ன?

நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அந்த அணியின் முக்கிய பவுலர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் காயமடைந்ததும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆட்டத்தின் பாதியிலேயே ஹாரிஸ் ராஃப் காயமடைய, அவருக்கு பதில் இப்திகார் அகமது பந்துவீசினார். அவரின் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை விளாசினார். அதே போல் இன்னிங்ஸ் முடியும் நேரத்தில் நசீம் ஷா காயமடைந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் பேட்டிங் செய்யவும் இல்லை.

இவர்கள் இருவரும் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக  ஷாநவாஸ் தஹானி, ஜமான் கான் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.