திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:32 IST)

சதத்தை நெருங்கும் கோலி… நங்கூரம் பாய்ச்சி நிற்கும் இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 480 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிசை தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்டநேரம் முடிவில் 99 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்துள்ளது.  இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, ஜடேஜாவின் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் கே எல் பரத்துடன் இணைந்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கோலி. தற்போது 359 ரன்கள் சேர்த்து நங்கூரம் பாய்ச்சி விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்த போட்டியில் கோலி சதத்தை 87 ரன்களோடு நோக்கி சென்று கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அவர் சதமடிக்கவில்லை. இப்போது ஆஸி அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் இந்திய மண்ணியில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். போலவே ஆஸி. அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.