1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (15:03 IST)

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!
சமீபகாலமாக இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் இழந்தது. இதற்குக் கோலி போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார்.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் “நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவிக்க வேண்டும். ஆனால் நீங்கள் சுழல்பந்து வீச்சாளர்களிடம் நெருக்கடியை சந்திப்பதை உணரமுடிகிறது. அதனால் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.