ஆடுன மேட்சோ கம்மி.. ஆனா ?? தோனியை ஓவர் டேக் செய்து சாதனை.. அதிரடிக்காரன் கோலி அசத்தல்
ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.
ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடரை அசத்தலாக விளையாடி கைப்பற்றியது இந்தியா. 2-1 என்ற கணக்கில் அத்தொடரில் வெற்றிப்பெற்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில், அதாவது டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகியவற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக தோனி 330 இன்னிங்ஸில் விளையாடி 11,207 ரன்கள் குவித்துள்ளார். இதனை 199 இன்னிங்ஸிலேயே 11,208 ரன்கள் குவித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் அப்போட்டியில் கேப்டனாக ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 5,000 ரன்கள் குவித்த சாதனையையும் பெற்றுள்ளார்.