தோனி சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடுவாரா ? சீனிவாசன் பதில் !

Last Modified திங்கள், 20 ஜனவரி 2020 (08:23 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இடம் இந்திய அணியில் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் ஐபிஎல் போட்டிகளிலாவது தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏ பிரிவில் இடம்பெற்ற தோனி ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் பெற்றார்.

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காத தோனி ஒப்பந்த பட்டியலிலும் இடம்பெறாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பேசப்பட்டது. இந்நிலையில் தோனியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளிலாவது தோனி தொடர்ந்து விளையாடுவாரா இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி சமீபத்தில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ‘தோனி இந்த ஆண்டு சென்னை அணிக்குத் தலைமை தாங்குவார். அடுத்த ஆண்டு ஏலத்திலும் அவர் சென்னை அணியில் தக்கவைக்கப் படுவார்.’ என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :