Daily Horoscope

மொத்தமாக 16 வீரர்களை கழித்து கட்டிய கொல்கத்தா அணி… வெளியான பட்டியல்!

Written By vinoth
Updated: புதன், 16 நவம்பர் 2022 (08:34 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2023ஆம்  ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை அறிவித்தன. இதில் அதிகளவு வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. மொத்தம் 16 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது. ஆனாலும் அந்த அணியிடம் மீதமுள்ள தொகை 8 கோடிக்குள்தான் உள்ளது.

கொல்கத்தா அணி விடுவித்த வீரர்கள்

பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சம்மிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் தோமர், அஜின்கியா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments