1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:29 IST)

2023 ஐபிஎல்: விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிப்பு!

IPL
2023ஆம்  ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை இன்று மாலை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
எந்த அணிகள் எந்த வீரர்களை விடுவிக்கும் என்று தெரிந்த பின்னரே மினி ஏலம் நடைபெறும் என்றும் மினி ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஜடேஜா விடுவிக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அது உண்மையா என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva