1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (02:49 IST)

’கபாலி’யுடன் சேர்த்து மூன்று ’லி’ - கொண்டாடிய வீரேந்தர் ஷேவாக்

உலகம் முழுக்க தொற்றிக்கொண்ட கபாலி காய்ச்சல் இந்திய கிரிக்கெட் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. கபாலி குறித்த தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.
 

 
இது குறித்து வீரேந்தர் ஷேவக் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று ’லி’க்கள் தான் தற்போது பேஷன்.
விராட் கோலி
மூலி [பரோட்டா]
கபாலி
 
மூன்றையும் இன்றைக்கு அனுபவித்தேன். மூலியுடன் கபாலி பார்த்தேன். பிறகு மாலையில் விராட் கோலி” என்று குறிப்பிட்டுள்ளார்.


 
மேலும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான திரைப்படம். முதல் நாள், முதல் காட்சி! திருவிழா தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.