1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூன் 2022 (16:51 IST)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் சமீபத்தில் காயமடைந்தார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்திய அணி இங்கிலாந்து அணியோடு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் அதிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது. மேலும் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. அவரின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.