வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 27 மே 2023 (17:06 IST)

Breaking: ஒரே நாளில் 10, +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! – ரிசல்ட்டை எங்கே பார்க்கலாம்?

Exam results
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை (ஜூன் 17)ம் தேதியும், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளைக்கு பதிலாக ஜூன் 20ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகியின்றன.

இந்த பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.nic.in உள்ளிட்ட வலைதளங்களில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தலைமை நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.