ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (10:48 IST)

பிரபல நடிகரின் மகளைக் கரம்பிடிக்கும் கே எல் ராகுல்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து இப்போது குணமாகி அணியில் இணைந்துள்ளார்.

அப்போது அவரோடு சென்று அவரைக் கவனித்துக்கொண்டார். அவரின் காதலியான அதியா ஷெட்டி. அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், விரைவில் அவர்களின் திருமணம் மும்பையில் நடக்கும் என சொல்லப்படுகிறது.