செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (10:43 IST)

திருமண ஏற்பாடுகள் தடபுடல் - பழமைவாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மையில் ஹன்சிகாவுக்கு திருமணம்!

திருமண ஏற்பாடுகள் தடபுடல் - 450 ஆண்டு பழமைவாய்ந்த அரண்மையில் ஹன்சிகாவுக்கு திருமணம்!
 
நடிகை ஹன்சிகா மோத்வானி தன திருமண வேளைகளில் படு பிஸியாகிவிட்டார்!
 
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. 
 
பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இதனிடையே அண்மையில் திடீரென தனது காதலரை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. 450 ஆண்டு கால பழமை வாய்நக ஜெய்ப்பூர் அரண்மனை ஒன்றில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக தனது வருங்கால கணவருடன் சுற்றி திரிந்து ஷாப்பிங் செய்து வருகிறார் ஹன்சிகா. அவர்களின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.