வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (08:35 IST)

சிம்பிளாக நடந்த அதிபரின் பேத்தி திருமணம்! – இப்படி நடப்பது இதுவே முதல்முறை?

Jo Biden
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தியின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் மகன் வயிற்று பேத்தி நவோமி பைடன். 28 வயதான நவோமி பைடன் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் 24 வயது சட்டக்கல்லூரி மாணவரான பீட்டர் நீல் என்பவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அவர்களது திருமணம் எளிய முறையில் வெள்ளை மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருப்பவரின் மகன், மகள் போன்றவர்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதிபரின் பேத்தி ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை என செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K