ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (07:42 IST)

NCA வில் பயிற்சியில் இறங்கிய கே எல் ராகுல்… கம்பேக் எப்போது?

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான கே எல் ராகுல் ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார். லக்னோ அணிக்கு விளையாடிய அவருக்கு  தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இழந்தார்.

இப்போது அறுவை சிகிச்சை முடிந்து தேறி வரும் அவர், மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இப்போது அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அங்கு அவர் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விரைவில் நடக்க உள்ள ஆசியா கோப்பை தொடரில் அவர் மீண்டும் அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.