1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (19:26 IST)

நடிகர் யோகிபாபு ஜிம்மில் உடற்பயிற்சி.... வீடியோ வைரல்

yogi babu
முன்னணி காமெடி நடிகர்  யோகிபாபு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு யோகி என்ற படத்தில் அறிமுகமானார்.  அதன்பின்னர், சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, வேலாயுதம் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மண்டேலா படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்  சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்கள் சந்தானம், சூரி உள்ளிட்டோர் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், யோகி பாபுவும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

தற்போது நடிகர் யோகி பாபு பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நிலையில்,  உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்ளும் பொருட்டு அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.