Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

Written By vinoth
Updated: திங்கள், 2 டிசம்பர் 2024 (08:29 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இது சம்மந்தமாகப் பேசியுள்ளா புஜாரா “ராகுலை டாப் ஆர்டரில் இருந்து மாற்றக் கூடாது. ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்பினால் கே எல் ராகுல் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும். ஷுப்மன் கில் வந்தால் கூட அவரை ஐந்தாவது வீரராக விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த பிரதமர் அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக இறங்கவைத்து தான் நான்காவது வீரராகக் களமிறங்கினார் ரோஹித் ஷர்மா.

அதனால் இரண்டாவது டெஸ்ட்டிலும் கே எல் ராகுல்தான் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்.. குவியும் வாழ்த்துக்கள்..

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments