திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

டி 20 அணியில் ருத்துராஜ் & ராகுலுக்கு வாய்ப்பிருக்காது… காரணம் இதுதான்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வது தேர்வுக் குழுவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணியில் ஒரே இடத்துக்கு சிறப்பாக விளையாடும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போது இருக்கிறார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருத்துராஜ் ஆகியோர் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளார்கள்.

ஆனால் கோலியும் ரோஹித் ஷர்மாவும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடப் போவதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த முறை ருத்துராஜுக்கு அணியில் இடம் கிடைக்காது என பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் செய்தியைக் கசியவிட்டுள்ளன. அதே போல கே எல் ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.